வேலை கிடைக்காத விரக்தியில் கபடி வீராங்கனை தூக்குப்போட்டு தற்கொலை
வேலை கிடைக்காத விரக்தியில் தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்ற கபடி வீராங்கனை தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
பூந்தமல்லி,
காஞ்சீபுரம் மாவட்டம் மாங்காடு அடுத்த மதனந்தபுரம் பஜனை கோவில் தெருவை சேர்ந்தவர் தர்மராஜ். இவருக்கு மூன்று மகள்கள், ஒரு மகன் உள்ளனர். இவரது இளைய மகள் பானுமதி (வயது 25). எம்.பி.ஏ. முதலாம் ஆண்டு படித்து வந்துள்ளார். மாநில மற்றும் தேசிய அளவிலான கபடி போட்டியில் பங்கேற்று பரிசுகளை வென்றுள்ளார்.
இவர் ராஜஸ்தான் மாநிலத்தில் நடைபெற்ற கபடி போட்டியில் பங்கேற்று விட்டு நேற்று காலை வீடு திரும்பியுள்ளார். பின்னர் மதியம் பானுமதி வீட்டின் அறையில் தூக்கில் தொங்கிய நிலையில் இருப்பதை கண்டு அவரது பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். உடனே அவரை மீட்டு அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் பானுமதி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
வேலை கிடைக்காததால்
இதுகுறித்து மாங்காடு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பானுமதியின் உடலை கைப்பற்றி போரூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துனர்.
வேலை கிடைக்காத விரக்தியில் கபடி வீராங்கனை தற்கொலை செய்து கொண்டிருப்பது போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது. மேலும் அவரது தற்கொலைக்கு வேறு ஏதாவது காரணங்கள் உள்ளதா? என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.