இலவச வீட்டுமனை பட்டா கேட்டு கலெக்டரிடம் மனு

வெடியரசம்பாளையம் பகுதி மக்கள் இலவச வீட்டுமனை பட்டா கேட்டு கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.

Update: 2022-03-22 18:56 GMT
நாமக்கல்:-

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே வெடியரசம்பாளையம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங்கிடம் கோரிக்கை மனு ஒன்றை கொடுத்தனர். அதில் கூறியிருப்பதாவது:-

ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்த நாங்கள் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளோம். தற்போது வாடகை வீட்டில் வசித்து வருகிறோம். கூலி வேலை செய்யும் நாங்கள் வீட்டு வாடகை கொடுக்க முடியாமல் மிகவும் கஷ்டப்பட்டு வருகிறோம். எனவே எங்கள் வாழ்வாதாரத்தை கருத்தில்கொண்டு இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்