அரசு பள்ளிகளில் படித்த கல்லூரி மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000
பள்ளிக்கல்விக்கு ரூ.36,895 கோடியும், காவல்துறைக்கு ரூ.10,285 கோடியும் ஒதுக்கீடு செய்ததோடு, அரசு பள்ளிகளில் படித்த கல்லூரி மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கப்படும் என்றும் தமிழக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை,
தமிழக சட்டசபையில் 2022-2023-ம் ஆண்டுக்கான பட்ஜெட் நேற்று தாக்கல் செய்யப்பட்டது.
பட்ஜெட் தாக்கல்
கடந்த ஆண்டு தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்ற நிலையில், முழுமையாக தாக்கல் செய்யப்படும் முதல் பட்ஜெட் இது.
இடைக்கால பட்ஜெட் போலவே, இந்த முறையும் காகிதம் இல்லாத வகையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. கையடக்க தொடுதிரையில் (டேப்லெட்) பார்த்து, நிதி அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட் உரையை காலை 10 மணிக்கு வாசிக்க தொடங்கினார்.
கூச்சல்-குழப்பம்
அப்போது, எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி எழுந்து, நடைபெற்று முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முடிவு குறித்து சில கருத்துகளை முன்வைத்து பேச முயன்றார். ஆனால், அவருக்கு மைக் இணைப்பு கொடுக்கப்படவில்லை. இருந்தாலும் அவர் பேசிக்கொண்டே இருந்தார்.
அ.தி.மு.க. உறுப்பினர்களும் அவருக்கு ஆதரவாக எழுந்து மைக் இணைப்பை வழங்குமாறு சபாநாயகரிடம் வலியுறுத்தினார்கள். இதனால், அவையில் கூச்சல்-குழப்பம் ஏற்பட்டது. அப்போது சபாநாயகர் மு.அப்பாவு எழுந்து, “நீங்கள் அனைவரும் இருக்கையில் அமருங்கள். நான் பேசுகிறேன். பட்ஜெட் தாக்கல் செய்யப்படும்போது வேறு எதுவும் பேச முடியாது. அது உங்களுக்கே தெரியும்” என்றார்.
அ.தி.மு.க. வெளிநடப்பு
ஆனாலும், தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி பேசிக்கொண்டே இருந்தார். ஒரு கட்டத்தில், அ.தி.மு.க. உறுப்பினர்கள் அனைவரும் ஒருசேர, “போடாதே.. போடாதே... பொய் வழக்கு போடாதே” என்று கோஷம் எழுப்ப தொடங்கினார்கள். இதனால், அவையில் பரபரப்பு நிலவியது.
சபாநாயகர் அப்பாவு, அ.தி.மு.க. உறுப்பினர்களை அமைதிப்படுத்த முயன்றும் அது முடியவில்லை. இந்த நிலையில், காலை 10.07 மணிக்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தலைமையில் அ.தி.மு.க. உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
புதிய வரிகள் இல்லை
அதன் பின்னர் நிதி அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் தங்குதடையில்லாமல் பட்ஜெட் உரையை வாசித்தார். உறுப்பினர்கள் அனைவரும் தங்கள் இருக்கைக்கு முன்னால் வைக்கப்பட்டிருந்த கையடக்க தொடுதிரையில், பட்ஜெட் உரையை பார்த்தனர். சரியாக காலை 11.50 மணிக்கு தனது பட்ஜெட் உரையை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நிறைவு செய்தார்.
தற்போது, மத்திய அரசு சரக்கு மற்றும் சேவை வரியை (ஜி.எஸ்.டி.) விதித்து வருவதால், மாநில அரசுகளால் புதிய வரியை விதிக்க முடியாது. ஆனால், செஸ் போன்ற ஓரிரு இனங்களில் மாநில அரசுகளால் வரி விதிக்க முடியும். அப்படி இருந்தாலும், புதிய வரிகள் எதுவும் விதிக்கப்படவில்லை.
கல்வித்துறைக்கு ரூ.36 ஆயிரம் கோடி
தமிழக பட்ஜெட்டில் கல்வித்துறைக்கு அதிக முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது. அதன்படி பள்ளி கல்வித்துறைக்கு ரூ.36 ஆயிரத்து 895.89 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதேபோல் உயர்கல்வித்துறைக்கு ரூ.5,668.89 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
பட்ஜெட் உரையில் இடம்பெற்ற முக்கிய அம்சங்கள் வருமாறு:-
உயர்கல்வி செல்லும் மாணவிகளுக்கு ரூ.1,000
* தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவிகளின் உயர் கல்வி சேர்க்கை மிக குறைவாக இருப்பதை கருத்தில்கொண்டு, மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதியுதவி திட்டம், மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர் கல்வி உறுதித்திட்டம் என மாற்றியமைக்கப்படுகிறது.
இதன் மூலம், அரசு பள்ளிகளில் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பயின்று மேற்படிப்பில் சேரும் அனைத்து மாணவிகளுக்கும் பட்டப்படிப்பு, பட்டயப்படிப்பு அல்லது தொழிற்படிப்பு ஆகியவற்றில் இடைநிற்றல் இன்றி முடிக்கும் வரை மாதம் ரூ.1,000 அவர்கள் வங்கி கணக்கிற்கு நேரடியாக செலுத்தப்படும். இந்த மாணவிகள் ஏற்கனவே, பிற கல்வி உதவித்தொகை பெற்று வந்தாலும், இந்த திட்டத்தில் கூடுதலாக உதவி பெறலாம். இத்திட்டத்தின் மூலம் சுமார் 6 லட்சம் மாணவிகள் ஒவ்வொரு ஆண்டும் பயன்பெற வாய்ப்புள்ளது. இதற்காக, ரூ.698 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
காவல்துறைக்கு ரூ.10,285 கோடி
* தமிழக பட்ஜெட்டில் காவல்துறைக்கு ரூ.10,285.22 கோடி வழங்கப்பட்டுள்ளது.
* தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறைக்காக ரூ.496.52 கோடி வழங்கப்பட்டுள்ளது.
வருவாய் பற்றாக்குறை குறைகிறது
* 2014-ம் ஆண்டு முதல் வருவாய் பற்றாக்குறை அச்சுறுத்தும் வகையில் ஆண்டுதோறும் அதிகரித்து வந்த நிலையில், முதன் முறையாக இந்த ஆண்டு இந்தநிலை மாற்றப்பட்டு, ரூ.7 ஆயிரம் கோடிக்கும் மேல் தமிழ்நாட்டின் வருவாய் பற்றாக்குறை குறைய உள்ளது. மேலும், இந்த சவாலான ஆண்டிலும் நிதி பற்றாக்குறை 4.61 சதவீதத்தில் இருந்து 3.80 சதவீதமாக குறைய உள்ளது.
* சரக்கு மற்றும் சேவை வரி இழப்பீட்டை மத்திய அரசு வழங்கும் கால வரையறை 30-6-2022 அன்று முடிவுக்கு வருகிறது. இதனால், வரும் நிதியாண்டில், சுமார் ரூ.20 ஆயிரம் கோடி நிதி இழப்பை தமிழ்நாடு சந்திக்க நேரிடும்.
கால்வாய் தூர்வாரும் பணி
* பயிர்க்கடன தள்ளுபடிக்காக ரூ.2,531 கோடியும், நகைக்கடன் தள்ளுபடிக்காக ரூ.1,000 கோடியும், சுயஉதவி குழுக்களின் கடன்கள் தள்ளுபடிக்காக ரூ.600 கோடியும் என இந்த பட்ஜெட்டில் மொத்தம் ரூ.4,131 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
* காவிரி டெல்டா பகுதியில் உள்ள 10 மாவட்டங்களில் ரூ.80 கோடி செலவில் ரூ.4,964 கி.மீ. நீளமுள்ள கால்வாய்களை தூர்வாரும் சிறப்பு பணிகளை மேற்கொள்வதற்கான ஒப்புதலை இந்த அரசு அளித்துள்ளது. இந்த ஆண்டு பாசனத்துக்காக மேட்டூர் அணை திறப்பதற்கு முன்பே இந்த பணிகள் துரிதமாக நிறைவேற்றப்படும்.
ரூ.300 கோடியில் தாவரவியல் பூங்கா
* லண்டன் கியூ பூங்கா அமைப்புடன் இணைந்து சென்னைக்கு அருகில் தாவரவியல் பூங்கா ரூ.300 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும். இதற்கான விரிவான திட்ட அறிக்கை இந்த ஆண்டு தயாரிக்கப்படும்.
* பிரதம மந்திரி வீட்டு வசதி திட்டத்திற்காக (நகர்ப்புறம்) ரூ.3,700 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மேற்கண்ட அறிவிப்புகள் பட்ஜெட்டில் இடம்பெற்றிருந்தன.