எஸ் எஸ் எல் சி பிளஸ்- 2 மாணவர்களுக்கு 2 வது திருப்புதல் தேர்வு 28 ந்தேதி தொடங்குகிறது
எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 மாணவர்களுக்கு 2-வது திருப்புதல் தேர்வு 28-ந்தேதி தொடங்குகிறது
புதுச்சேரி
எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 மாணவர்களுக்கு 2-வது திருப்புதல் தேர்வுகள் வருகிற 28-ந்தேதி தொடங்குகின்றன.
திருப்புதல் தேர்வு
கொரோனா தொற்று குறைந்த நிலையில் தற்போது பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்தநிலையில் மாணவர்களுக்கு பொதுத்தேர்வை சந்திக்க ஆயத்தமாக திருப்புதல் தேர்வுகளை நடத்தவும் திட்டமிடப்பட்டது.
அதன்படி கடந்த மாதம் எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 மாணவர்களுக்கு முதல் திருப்புதல் தேர்வு நடத்தப்பட்டது. தற்போது 2-வது திருப்புதல் தேர்வு நடத்தப்பட உள்ளது. இதற்கான அட்டவணையை கல்வித்துறை வெளியிட்டுள்ளது.
எஸ்.எஸ்.எல்.சி.
எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 மாணவர்களுக்கு திருப்புதல் தேர்வுகள் வருகிற 28-ந்தேதி தொடங்குகிறது. எஸ்.எஸ்.எல்.சி. மாணவர்களுக்கு காலை 10 மணிமுதல் 1 மணிவரை தேர்வுகள் நடக்கிறது.
28-ந்தேதி மொழிப்பாட தேர்வும், 29-ந்தேதி ஆங்கிலம், 30-ந்தேதி கணக்கு, 31-ந்தேதி அறிவியல், ஏப்ரல் 1-ந்தேதி சமூக அறிவியல் பாட தேர்வும் நடக்கிறது.
பிளஸ்-2
பிளஸ்-2 மாணவர்களுக்கு பிற்பகல் 2 மணி முதல் 5 மணி வரை தேர்வுகள் நடக்கிறது. 28-ந்தேதி மொழிப்பாடம், 29-ந்தேதி ஆங்கிலம், 30-ந்தேதி கம்ப்யூட்டர் சயின்ஸ், கம்ப்யூட்டர் அப்ளிகேசன்ஸ், ஹோம்சயின்ஸ், அரசியல் அறிவியல் பாடங்களுக்கும், 31-ந்தேதி வேதியியல், கணக்கியல், புவியியல் ஆகிய பாடங்களுக்கும் நடக்கிறது.
ஏப்ரல் 1-ந்தேதி உயிரியல், தாவரவியல், வரலாறு, வர்த்தக கணக்கு மற்றும் புள்ளியில், எலக்ட்ரிக்கல் என்ஜினீயரிங், எலக்ட்ரானிக் என்ஜினீயரிங், சிவில் என்ஜினீயரிங், ஆட்டோமொபைல் என்ஜினீயரிங், மெக்கானிக்கல் என்ஜினீயரிங், அலுவலக மேலாண்மை ஆகிய பாடங்களுக்கும், 4-ந்தேதி கணக்கு, விலங்கியல், வணிகவியல், டெக்ஸ்டைல் ஆடை வடிவமைப்பு, வேளாண் அறிவியல் ஆகிய பாடங்களுக்கும், 5-ந்தேதி இயற்பியல், பொருளாதாரம், கம்ப்யூட்டர் டெக்னாலஜி ஆகிய பாடங்களுக்கும் தேர்வுகள் நடக்கிறது.