தமிழக பட்ஜெட்: வடசென்னையின் ஆர்.கே.நகர் தொகுதியில் விளையாட்டு வளாகம்
வடசென்னையின் ஆர்.கே.நகர் தொகுதியில் விளையாட்டு வளாகம் அமைக்கப்படும் என அறிக்கப்பட்டு உள்ளது.
சென்னை
தமிழக சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. எதிர்க்கட்சிகள் அமளிக்கு இடையே பட்ஜெட்டை தாக்கல் செய்து நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் உரை நிகழ்த்தினார்.
பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள் வருமாறு:-
* தமிழ்நாட்டில் இருந்து உலகத்தரம் வாய்ந்த விளையாட்டு வீரர்களையும் ஒலிம்பிக் பதக்க வெற்றியாளர்களையும் உருவாக்க தமிழ்நாடு ஒலிம்பிக் தங்க பதக்க தேடல் திட்டம் உருவாக்கப்படும்.
* ஒலிம்பிக் போட்டிகளில் கலந்து கொண்டு தங்க பதக்கம் வெல்லும் அளவுக்கு உலகத்தரம் வாய்ந்த விளையாட்டு வீரர்களை உருவாக்க ரூ.25 கோடி ஒதுக்கீடு.
* தமிழ்நாடு ஒலிம்பிக் தங்கப் பதக்க தேடல் திட்டத்திற்கு ரூ.25 கோடி நிதி ஒதுக்கீடு; வடசென்னையின் ஆர்.கே.நகர் தொகுதியில் விளையாட்டு வளாகம் அமைக்கப்படும்.