கல்வியியல் கல்லூரி மாணவர்கள் உண்ணாவிரதம்
புதிய கட்டிடம் அமைத்து தரக்கோரி கல்வியியல் கல்லூரி மாணவர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
கூட்டுறவு கல்வியியல் கல்லூரிக்கான புதிய கட்டிடம் அமைத்துத்தர வேண்டும், கல்லூரியின் தற்போதைய நிர்வாகத்தில் இருந்து பிரித்து புதுவை அரசு கல்வித்துறையுடன் இணைத்து தரவேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கூட்டுறவு கல்வியியல் கல்லூரி மாணவர்கள் இன்று புதுவை அண்ணா சிலை அருகே உண்ணாவிரத போராட்டம் நடத்தினார்கள்.
போராட்டத்துக்கு புதுச்சேரி யூனியன் பிரதேச மாணவர்கள் கூட்டமைப்பு நிறுவனர் சாமிநாதன் தலைமை தாங்கினார். நேரு எம்.எல்.ஏ. மாணவர்களின் போராட்டத்தை தொடங்கி வைத்தார். உண்ணாவிரதத்தில் யூனியன் பிரதேச மாணவர்கள் கூட்டமைப்பு தலைவர் புவியரசன், துணை தலைவர் தமிழ்செல்வன், செயலாளர் பிரசாத் மற்றும் மாணவ, மாணவிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். காலை 9 மணிக்கு தொடங்கிய இந்த உண்ணாவிரதம் இரவு 9 மணி வரை நடந்தது.