உலகிலேயே மிகச்சிறந்த பாடத்திட்டமாக பொறியியல் பாடத்திட்டம் மாற்றப்படும் - அமைச்சர் பொன்முடி
உலகிலேயே மிகச்சிறந்த பாடத்திட்டமாக பொறியியல் பாடத்திட்டம் மாற்றப்படும் என்று அமைச்சர் பொன்முடி கூறினார்.
சென்னை,
வளரும் தொழில் நுட்பத்திற்கேற்ப பொறியியல் பாடத்திட்டத்தை மாற்றுவது குறித்த பயிலரங்கு கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர் பேசியதாவது:-
உலகிலேயே மிகச்சிறந்த பாடத்திட்டமாக பொறியியல் பாடத்திட்டம் மாற்றப்படும். தொழிற்துறையில் 2.1 மில்லியன் வேலைவாய்ப்புகள் உருவாகும்போது, அதற்கேற்ப மாணவர்களை உருவாக்க வேண்டும். படிக்கும்போதே வேலைவாய்ப்புக்கான பயிற்சியை மாணவர்கள் பெற வேண்டும்.
பள்ளி, கல்லூரிகளில் மாணவர்களின் தொழிற்திறனை வளர்த்தெடுக்க பாடத்திட்டத்தை மாற்றியமைக்க வேண்டியது அவசியம் என்று முதலமைச்சர் கூறியிருக்கிறார்; அந்த வகையில், 25 ஆண்டுகளுக்குப் பின் அண்ணா பல்கலைக்கழக பாடத்திட்டம் உலகத்தரத்துக்கேற்ப மாற்றப்பட உள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.