காதலிக்க மறுத்த மாணவியை கல்லால் தாக்கிய வாலிபர்...!

சிதம்பரம் அருகே காதலிக்க மறுத்த மாணவியை கல்லால் தாக்கியை வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

Update: 2022-03-17 06:30 GMT
கடலூர், 

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அடுத்த அய்யனூர் பகுதியை சேர்ந்த நடனசிகாமணி என்பரின் மகன் அழகர் (வயது 19). இவர் ஐ.டி.ஐ. படித்து உள்ளார். 

இந்த நிலையில் சிதம்பரம் - சீர்காழி சாலையில் உள்ள ஐ.டி.ஐ.யில் 2-ம் ஆண்டு படித்து வரும் சிறகிழந்த நல்லூரை சேர்ந்த 19 வயது மாணவிக்கும்  அழகருக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இவர்கள் இருவரும் முதலில் நட்பாக பழகி வந்த நிலையில் அழகர் அந்த மாணவியை ஒருதலையாக காதலித்து உள்ளார். இந்த நிலையில இன்று தனது காதலை மாணவியிடம் அழகர் வெளிப்படுத்தி உள்ளார். ஆனால் மாணவி  அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.

இதனால் ஆத்திரம் அடைந்த அழகர், அந்த மாணவியை வாய்க்கு வந்தவாறு திட்டி கல்லால் தாக்கிவிட்டு தப்பியோடி உள்ளார். இது குறித்து மாணவி  சிதம்பரம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.  புகாரின் போில் வழக்குப்பதிவு செய்த போலீசார், அழகரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

மேலும் செய்திகள்