மெட்ரோ ரெயில் இயக்கப்படும் நேரம் நீட்டிப்பு
மெட்ரோ ரெயில் இயக்கப்படும் நேரம் நீட்டிப்பு.
சென்னை,
சென்னையில் மெட்ரோ ரெயில், திங்கட்கிழமை முதல் சனிக்கிழமை வரை காலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை இயக்கப்படுகிறது. நெரிசல் மிகு நேரங்களான காலை 8 மணி முதல் பகல் 11 மணி வரையிலும் மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் 5 நிமிட இடைவெளியிலும், மற்ற நேரங்களில் 10 நிமிட நேர இடை வெளியிலும் மெட்ரோ ரெயில் இயக்கப்படுகிறது. இரவு 10 மணி முதல் 11 மணி வரை 15 நிமிட இடைவெளியில் இயக்கப்படுகிறது. ஞாயிற்றுக்கிழமை மற்றும் அரசு விடுமுறை நாட்களில் காலை 5 மணி முதல் இரவு 10 மணி வரையில் 10 நிமிடமும, இரவு 10 மணி முதல் 11 மணி வரை 15 நிமிட இடைவெளியிலும் இயக்கப்படுகிறது. இந்நிலையில், இன்று (வியாழக்கிழமை) முதல் அனைத்து நாட்களிலும் காலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை ரெயில்கள் இயக்கப்படுகிறது.
மேற்கண்ட தகவல்களை மெட்ரோ ரெயில் நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.