10 ரூபாய் நாணயங்கள் வாங்க வங்கிகள் மறுப்பு பாகூர் வணிகர்கள் புகார்
10 ரூபாய் நாணயங்கள் வாங்க வங்கிகள் மறுத்துள்ளனர். பாகூர் வணிகர்கள் புகார்
பாகூர்
பாகூரில் உள்ள தேசிய வங்கி ஒன்றில் வாடிக்கையாளர் ஒருவர் டெபாசிட் செய்த 10 ரூபாய் நாணயங்களை காசாளர் வாங்க மறுத்துள்ளார். இதுகுறித்து முறையிட்ட போது வங்கி மேலாளரும் அதற்கு ஆமோதித்துள்ளார். மற்ற வங்கிகளிலும் 10 ரூபாய் நாணயங்களை வாங்க மறுத்துள்ளனர்.
மத்திய ரிசர்வ் வங்கி 10 ரூபாய் நாணயம் செல்லும். தடையின்றி வாங்கிக் கொள்ளுமாறு வங்கிகளுக்கு அறிவுறுத்தியுள்ள நிலையில் சில வங்கிகள் 10 ரூபாய் நாணயங்களை வாங்க மறுப்பது வணிகர்கள் மற்றும் பொதுமக்களிடையே சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து அரசு உரிய நடவடிக்கை எடுத்து அனைத்து வங்கிகளிலும் 10 ரூபாய் நாணயங்களை வாங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வணிகர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்