தமிழகத்தில் இன்று 77 பேருக்கு கொரோனா தொற்று - உயிரிழப்பு இல்லை

தமிழகத்தில் இன்று 77 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Update: 2022-03-15 15:07 GMT
சென்னை,

தமிழகத்தில் இன்றைய கொரோனா தொற்று குறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

தமிழகத்தில் இன்று 77 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை கொரோனா பாதித்தோர் மொத்த எண்ணிக்கை 34,52,073 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் இன்று கொரோனா பாதிப்பால் யாரும் உயிரிழக்கவில்லை. இதுவரை மொத்தம் 38 ஆயிரத்து 24 பேர் நோய் தொற்றால் உயிரிழந்து உள்ளனர்.

கொரோனா பாதிப்பில் இன்று ஒரேநாளில் 169 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதன் மூலம் கொரோனாவால் குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 34,13,087 ஆக உள்ளது.

சென்னையில் 28 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மட்டும் இதுவரை மொத்தம் 7,50,789 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகம் முழுவதும்  கொரோனாவால் பாதிக்கப்பட்டு 962 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்