புதுச்சேரியில் மேலும் 5 பேருக்கு கொரோனா உறுதி

புதுச்சேரியில் மேலும் 5 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.

Update: 2022-03-15 12:51 GMT
புதுச்சேரி
புதுவையில் காலை 10 மணியுடன் நிறைவடைந்த 24 மணிநேரத்தில் 428 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அவர்களில் 5 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. தற்போது 17 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு தொடர் சிகிச்சையில் உள்ளனர். நேற்று 4 பேர் குணமடைந்தனர்.
புதுவையில் தொற்று பரவல் 1.17 சதவீதமாகவும், குணமடைவது 98.81 சதவீதமாகவும் உள்ளது. நேற்று முதல் தவணை தடுப்பூசியை 134 பேரும், 2-வது தவணை தடுப்பூசியை 958 பேரும், பூஸ்டர் தடுப்பூசியை 61 பேரும் செலுத்திக்கொண்டனர். இதுவரை 16 லட்சத்து 6 ஆயிரத்து 989 தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்