பாலியல் வன்கொடுமை: இளைஞருக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை...!
15 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தில் குற்றவாளிக்கு சாகும்வரை ஆயுள் தண்டனை விதித்து புதுக்கோட்டை மகிளா நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
புதுக்கோட்டை
புதுக்கோட்டையில் 15-வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் இளைஞருக்கு சாகும் வரை ஆயுள் சிறை விதித்து புதுக்கோட்டை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
உறவினரின் அக்கா மகளை பாலியல் வன்கொடுமை செய்ததாக முருகேசன் என்பவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு புதுக்கோட்டை மகளிர் நீதிமன்றத்தில் விசாரணை நடத்தப்பட்டு வந்தது.
இந்த நிலையில், முருகேசனுக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்தும் 30 ஆயிரம் அபராதம் விதித்தும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்திற்கு அரசின் தரப்பில் ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.