வருங்கால வைப்பு நிதி வட்டி குறைப்பு நியாயமற்றது டாக்டர் ராமதாஸ் அறிக்கை
வருங்கால வைப்பு நிதி 8.10 சதவீதமாக குறைக்கப்பட்டது நியாயமற்றது என்றும், அதை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்றும் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.
சென்னை,
தொழிலாளர்களின் வருங்கால வைப்பு நிதி (பி.எப்.) மீதான ஆண்டு வட்டி 2021-2022-ம் ஆண்டில், 8.10 சதவீதமாக ஆக குறைக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. தொழிலாளர்களின் சமூகப் பாதுகாப்பை உறுதி செய்யும் வருங்கால வைப்பு நிதி மீதான வட்டி ஒரே நேரத்தில் 0.40 சதவீதம் குறைக்கப்பட்டிருப்பது அநீதியானது. வருங்கால வைப்பு நிதி மீது கடந்த 44 ஆண்டுகளில் இதுதான் மிகவும் குறைவான வட்டியாகும்.
வருங்கால வைப்பு நிதி மீதான வட்டி விகிதம் குறைக்கப்படுவதற்கு எந்த நியாயமும் இல்லை. 8.5 சதவீத வட்டி கூட வழங்க மறுப்பது பெரும் அநீதி ஆகும். வங்கிகளில் செய்யப்படும் முதலீடுகளுக்கு 6.5 சதவீத மட்டுமே வட்டி வழங்கப்படுகிறது என்பதால் வருங்கால வைப்பு நிதி மீதான வட்டியையும் குறைக்க வேண்டும் என்று கூறுவது நியாயமல்ல.
திரும்ப பெற வேண்டும்
வங்கிகளில் பெரும் பணக்காரர்களும், பெரு நிறுவனங்களும் தங்களிடம் உபரியாக உள்ள பணத்தை பாதுகாப்புக்காக வைப்பீடு செய்திருப்பார்கள். ஆனால், வருங்கால வைப்பு நிதி முதலீடுகள் அப்படிப்பட்டவை அல்ல. தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் மாத ஊதியம், அவர்களின் குடும்பச் செலவுகளுக்கு போதுமானது அல்ல என்றாலும் கூட, செலவுகளை குறுக்கிக் கொண்டு தான், எதிர்கால சமூகப் பாதுகாப்புக்காக வருங்கால வைப்பு நிதியில் முதலீடு செய்கின்றனர். அதன் மீதான வட்டியைக் குறைக்கக்கூடாது.
தொழிலாளர்களின் ஓய்வுக்குப் பிந்தைய காலம் பாதுகாப்பற்றதாக மாறி வருகிறது என்பதையே இது காட்டுகிறது. தொழிலாளர்களுக்கு எதிர்காலம் பாதுகாப்பானதாக அமைவதை உறுதி செய்ய அவர்களின் வருங்கால வைப்பு நிதி மீதான வட்டி 8.10 சதவீதமாக ஆக குறைக்கப்பட்டதை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும். வருங்கால வைப்பு நிதிக்கு குறைந்தது 10 சதவீத வட்டி வழங்கப்படுவதை அரசு உறுதி செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.