சாத்தூரில் ஏடிஎம் மையத்தில் தீ விபத்து; போலீசார் விசாரணை
சாத்தூர் அருகே ஏடிஎம் மையத்தில் ஏற்பட்ட தீ விபத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சாத்தூர்,
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே தனியார் கல்லூரி ஒன்று உள்ளது. இந்த கல்லூரியின் வளாகத்தில் ஏடிஎம் மையம் ஒன்றும் செயல்பட்டு வருகின்றது. இந்த ஏடிஎம் மையத்தில் மாணவர்கள், பொது மக்கள் என்று ஏராளமானவர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று மாலை இந்த ஏடிஎம் மையத்தில் திடீர் என்று தீ பற்றியது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதியினர் தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் கொடுத்தனர். இந்த தகவலை தொடர்ந்து சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு வீரர்கள் ஏடிஎம் மையத்தில் ஏற்பட்ட தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர்.
இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த சாத்தூர் போலீசார், தீ விபத்துக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.