பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி வெற்றி: கமல்ஹாசன் வாழ்த்து

பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி வெற்றி: கமல்ஹாசன் வாழ்த்து.

Update: 2022-03-11 18:39 GMT
சென்னை,

அண்மையில் நடந்து முடிந்த 5 மாநில சட்டமன்ற தேர்தலில், பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி கட்சி மகத்தான வெற்றி பெற்றுள்ளது. இதையொட்டி, மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்து பதிவிட்டுள்ள தமது டுவிட்டர் பதிவில் “5 மாநில தேர்தல் முடிவுகளில் குறிப்பிட வேண்டிய வெற்றியை சாதித்துக் காட்டி இருக்கிறார் நண்பர் அரவிந்த் கெஜ்ரிவால். கட்சி தொடங்கிய ஒரே தசாப்தத்தில் (10 ஆண்டுகளில்) மாநில எல்லையை கடந்து 2-ம் மாநிலத்தில் அழுத்தமாகக் காலூன்றி இருக்கும் ஆம் ஆத்மியைப் பாராட்டுகிறேன்” என்று தெரிவித்து உள்ளார்.

மேலும் செய்திகள்