தயாளு அம்மாள் மருத்துவமனையில் அனுமதி

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று தயாளு அம்மாள் உடல்நிலை குறித்து கேட்டறிந்தார்.

Update: 2022-03-10 16:03 GMT
கோப்புக்காட்சி
சென்னை, 

மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் மனைவியும், தற்போதைய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தாயாருமான தயாளு அம்மாள் சென்னை கோபாலபுரத்தில் உள்ள இல்லத்தில் வசித்து வருகிறார். 89 வயதான இவர், வயது மூப்பின் காரணமாக, வீட்டிலேயே ஓய்வெடுத்து வந்தார்.

இந்த நிலையில், நேற்று அவருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில், சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். தயாளு அம்மாளை மூத்த மகன் மு.க.அழகிரி, மகள் செல்வி ஆகியோர் அருகில் இருந்து கவனித்து வருகின்றனர்.

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று தயாளு அம்மாள் உடல்நிலை குறித்து கேட்டறிந்தார். இதுகுறித்து, மருத்துவமனை டாக்டர்கள் கூறுகையில், ‘வயது மூட்பின் காரணமாக ஏற்பட்ட உடல்நல பாதிப்புகள் குறித்த பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. அவருக்கான சிகிச்சை அளிக்கப்பட்டு ஓரிரு நாட்களில் வீடு திரும்புவார்’’ என்று தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்