அதிமுகவை சசிகலா வழிநடத்த வேண்டும்" - தூத்துக்குடி அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம்
அதிமுகவை சசிகலா வழிநடத்த வேண்டும் என்று தூத்துக்குடி அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தூத்துக்குடி,
தூத்துக்குடி மாவட்டம் தரவைகுளத்தில் அதிமுக நிர்வாகிகள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது.
இதில் இன்றைய அதிமுக கழக ஒருங்கிணைப்பாளர்கள் சுயநலத்தோடு கழகத்தை அதல பாதாளத்திற்கு கொண்டு சென்று இருக்கிறார்கள், அவர்களை இந்த கூட்டத்தின் வாயிலாக வண்மையாக கண்டிக்கிறோம் என்றும் அதிமுகவை சசிகலா வழிநடத்த வேண்டும் என்றும் அவர்களோடு இணைந்து கழக பணியாற்றிட வேண்டும் என கூட்டத்தில் சிறப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்த கூட்டத்தில் தூத்துக்குடி வடக்கு, தெற்கு மாவட்ட மற்றும் ஒன்றிய அ.தி.மு.க. நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.