2 ஆண்டுகளுக்கு பிறகு மதுரை சித்திரை திருவிழாவில் பக்தர்களுக்கு அனுமதி...!
2 ஆண்டுகளுக்கு பிறகு மதுரை சித்திரை திருவிழாவில் பங்கேற்க பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மதுரை,
திருவிழாக்கள் நகரான மதுரை சித்திரைத் திருவிழா வரும் ஏப்ரல் 5-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இந்த திருவிழாவிற்கு தமிழகம் மட்டுமில்லாது, உலக நாடுகளில் இருந்தும் பக்தர்கள் லட்சக்கணக்கில் திரள்வார்கள். அந்த நாட்களில் மதுரையே திருவிழாக் கோலம் பூண்டிருக்கும்.
இந்த நிலையில், 2 ஆண்டுகளுக்கு பிறகு மதுரை சித்திரை திருவிழாவில் பங்கேற்க பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கொரோனா காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக பக்தர்களின்றி நடைபெற்ற சித்திரை திருவிழா இந்த ஆண்டு பக்தர்களுடன் விமர்சியாக நடைபெற உள்ளது.
திருவிழாவின் முக்கிய நிகழ்வுகளான கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளும் நிகழ்வு ஏப்ரல் 16-ம் தேதி நடைபெற உள்ளது. கள்ளழகர் நிகழ்வு மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம் ஆகியவை இந்த ஆண்டும் பக்தர்களுடன் நடக்க உள்ளதால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.