எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-1, பிளஸ்-2 பொதுத்தேர்வுகளை எழுத தனித்தேர்வர்கள் இன்று முதல் விண்ணப்பிக்கலாம்
எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-1, பிளஸ்-2 பொதுத்தேர்வுகளை எழுத தனித்தேர்வர்கள் இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என்று அரசு தேர்வுத்துறை அறிவித்துள்ளது.
சென்னை,
எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 வகுப்புக்கான பொதுத்தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தனித்தேர்வர்கள் 9-ந் தேதி (இன்று) முதல் 16-ந் தேதி வரையிலான நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை கல்வி மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டுள்ள அரசு தேர்வுத்துறை சேவை மையங்களுக்கு நேரில் சென்று இணையதளம் மூலம் தங்களுடைய விண்ணப்ப பதிவினை செய்து கொள்ளலாம்.
மேற்சொன்ன தேதிகளில் விண்ணப்பிக்க தவறுபவர்கள் சிறப்பு அனுமதி (தட்கல்) முறையில் வருகிற 18-ந் தேதி முதல் 21-ந் தேதி வரையிலும் கூடுதலாக மேல்நிலை பொதுத்தேர்வுக்கு ரூ.1,000-ம், எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வுக்கு ரூ.500-ம் கட்டணமாக செலுத்தி விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிப்பது தொடர்பான மேலும் விவரங்களுக்கு www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் சென்று தெரிந்து கொள்ளலாம்.
மேற்கண்ட தகவல் அரசு தேர்வுத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.