6 முதல் 9-ம் வகுப்பு வரை மே மாதம் இறுதித் தேர்வு - அமைச்சர் அன்பில் மகேஷ்
6 முதல் 9 -ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு நடப்பு ஆண்டில் மட்டும் மே மாதம் தேர்வு நடைப்பெறும் என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
சென்னை,
பள்ளி மேலாண்மைக் குழுவின் கட்டமைப்பை மேலும் வலுப்படுத்துதற்கான பரப்புரை தொடக்க விழா, சென்னை - கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் இன்று நடைபெற்றது. இதில் 'நம் பள்ளி நம் பெருமை' என்ற புதிய செயலியை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார்.
அதன் பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியதாவது:-
6 முதல் 9-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு வரும் மே மாதம் தேர்வு நடைப்பெறும். நடப்பு ஆண்டில் மட்டும் மே மாதத்தில் இறுதித் தேர்வு நடைபெறும். அடுத்த ஆண்டிலிருந்து வழக்கம்போல ஏப்ரல் மாதத்திலேயே ஆண்டு இறுதித் தேர்வு நடத்தி முடிக்கப்படும்.
அரசுப் பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப ஆசிரியர்களை அதிகப்படுத்துவது குறித்து விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் .
இவ்வாறு அவர் கூறினார்.