சென்னையில் ஆபரண தங்கம் சவரனுக்கு ரூ.408 குறைந்தது
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.408 குறைந்து, ஒரு சவரன் ரூ.40,160க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சென்னை,
தங்கத்தின் விலை பங்குச்சந்தை நிலவரத்துக்கேற்ப அவ்வப்போது ஏற்றத்தாழ்வை சந்திக்கும். ஆனால் ரஷியா-உக்ரைன் போர் காரணமாக, பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி அடைந்ததை தொடர்ந்து தங்கம் விலை தாறுமாறாக உயர்ந்தது. ‘கிடுகிடு’வென உயர்ந்து வரும் தங்கம் விலை ரூ.40 ஆயிரத்தை (பவுன்) எட்டினாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை என்ற வல்லுனர்களின் ஆரூடம் பலித்திருக்கிறது.
நேற்று கிராமுக்கு ரூ.101 உயர்ந்து ரூ.5,071-க்கும், பவுனுக்கு ரூ.808 உயர்ந்து ரூ.40,568-க்கும் தங்கம் விற்பனை ஆனது. இந்தநிலையில் இன்று தங்கம் விலை சற்று குறைந்தது.
சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ 408 குறைந்து ரூ 40,160க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ 51 குறைந்து ரூ.5,020க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சென்னையில் வெள்ளியின் விலை ஒரு கிராமுக்கு ரூ 1.10 குறைந்து ரூ.74.60க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ரஷியா-உக்ரைன் போர் எதிரொலியாக தங்கம் விலை ரூ.40 ஆயிரத்தை எட்டியிருக்கிறது. ‘இன்னும் என்ன ஆகுமோ?’ என பொதுமக்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.