முகநூலில் மலர்ந்த காதல்: இதய நோயால் காதலி இறந்ததால் காதலன் தற்கொலை
முகநூலில் மலர்ந்த காதலில் இறுதிவரை காதலியின் முகம் பாராமல் காதலித்து வந்த வாலிபர், அந்த காதலி இதய நோயால் இறந்து விட்டார் என்று தெரிந்தவுடன், அவரும் தற்கொலை செய்து கொண்டார்.
கள்ளக்குறிச்சி,
கள்ளக்குறிச்சி மாவட்டம் மேலத்தேனூர் கிராமத்தை சேர்ந்தவர் சக்திவேல் மகன் மணிகண்டன் (வயது 26). 8-ம் வகுப்பு வரை படித்துள்ள இவர், புகைப்பட கலைஞர் ஆவார். இவர் சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன் பாளையத்தில் ஸ்டூடியோ வைத்து நடத்தி வந்தார்.
இவருக்கு முகநூல்(பேஸ்புக்) மூலமாக பூமிகா என்கிற பெண் அறிமுகமானார். இருவரும் முதலில் நண்பர்களாக பேசி வந்தனர். பின்னர், அவர்களுக்குள் காதல் மலர்ந்தது. இதுவரையில் இருவரும் நேரில் சந்தித்தது இல்லை. ஆனாலும் மணிகண்டன் பூமிகாவை ஆழமாக காதலித்து வந்துள்ளார்.
காதலி திடீர் மரணம்
ஆனால் பூமிகா இதய நோயால் பாதிக்கப்பட்டவர். இருந்தாலும், மணிகண்டனின் இதயம் முழுவதும் அவர் தான் நிறைந்திருந்துள்ளார். சில நாட்களாக பூமிகாவிடம் மணிகண்டனால் பேச முடியவில்லை. இதனால் பூமிகாவுக்கு என்ன ஆனது என்று தெரியாமல் அவர் பரிதவித்து போனார்.
தொடர்ந்து பூமிகாவின் செல்போனுக்கு அவர் தொடர்பு கொண்ட நிலையிலேயே இருந்துள்ளார். அதில், சில தினங்களுக்கு முன்பு பூமிகாவின் பாட்டி செல்போனை எடுத்து பேசினார்.
அவரிடம் பூமிகா குறித்து மணிகண்டன் கேட்டார். அப்போது அவர், இதய நோய் பாதிப்பு காரணமாக பூமிகா இறந்து விட்டதாக தெரிவித்துள்ளார். இதை கேட்டவுடன், மணிகண்டனின் இதயமும் பேரதிர்ச்சிக்கு உள்ளானது. அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்து போனார்.
விஷத்தை குடித்தார்
காதலில், ஈரிதயம் ஓர் இதயம் ஆனது என்று சொல்வார்கள், அந்த வகையில் இதய நோயால் காதலி சென்ற இடத்துக்கே சென்று விடலாம் என்கிற முடிவுக்கு மணிகண்டன் வந்தார். இறுதியாக, வீட்டில் இருந்த விஷத்தை எடுத்து குடித்தார். சென்னை ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்த மணிகண்டன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து அவரது தந்தை சக்திவேல் கொடுத்த புகாரின்பேரில் ரிஷிவந்தியம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.