பன்றி குறுக்கே வந்ததால் கவிழ்ந்த ஆட்டோ; டிரைவர் உயிரிழப்பு - 4 பேர் படுகாயம்...!

முக்கூடலில் பன்றி குறுக்கே வந்து ஆட்டோ கவிழ்ந்த விபத்தில் டிரைவர் உயிரிழந்த நிலையில் 4 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

Update: 2022-03-06 07:59 GMT
முக்கூடல்,

திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரத்தை சேர்ந்தவர் அருணாசலம் (வயது34). இவர் தனது மனைவி பரமேஸ்வரி மற்றும் 2 குழந்தைகளுடன் முக்கூடல் தாமிரபரணி ஆற்றுக்கு குளிப்பதற்காக ஆட்டோவில் சென்று உள்ளனர்.

ஆட்டோ கபாலிபாறை அருகே வந்தபோது சாலையின் குறுக்கு பன்றி வந்துள்ளது. டிரைவர் பன்றி மீது மோதாமல் இருப்பதற்காக ஆட்டோவை திருப்பி உள்ளார்.

இதில் கட்டுப்பாட்டை இழந்த ஆட்டோ சாலையோரத்தில் கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானது.  இந்த விபத்தில் ஆட்டோவின் டிரைவர் பாலு தூக்கி வீசப்பட்டு சாலையில் விழுந்தார். இதில் தலையில் பலத்த காயம் அடைந்த ஆட்டோ டிரைவர் பாலூ சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதனை அறிந்த அப்பகுதியினர் ஆட்டோவில் சிக்கி இருந்த அருணாசலம் மனைவி பரமேஸ்வரி மற்றும் குழந்தைகளை மீட்டு முக்கூடல் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அனுமதித்தனர்.

இந்த விபத்து குறித்து அறிந்த பாப்பாக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

இந்த விபத்தில் உயிரிழந்த பாலூக்கு மனைவி மற்றும் 3 குழந்தைகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 


மேலும் செய்திகள்