சமூக வலைத்தளங்களில் ஆபாச வீடியோ வெளியிட்ட பூசாரி கைது...!
சமூக வலைத்தளங்களில் ஆபாச வீடியோ வெளியிட்ட பூசாரி கைது செய்யப்பட்டு உள்ளார்.
உடுமலை,
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள கணியூரைச் சேர்ந்தவர் வைத்தியநாதன் என்கிற பாலாஜி (வயது 50). இவர் கோவில் பூசாரி உள்ளார்.
பாலாஜி சமூக வலைத் தளங்களில் குழந்தைகளின் ஆபாச வீடியோ பதிவேற்றம் செய்ததாக கூறப்படுகின்றது. இந்த சம்பவத்தை தொடர்ந்து பாலாஜியின் சமூக வலைத்தள கணக்குகளை போலீசார் ஆய்வு செய்தனர்.
அப்போது குழந்தைகளின் ஆபாச வீடியோக்களை பாலாஜி பதிவேற்றம் செய்தது உறுதியானதை தொடர்ந்து அவரை கைது செய்துனர். தற்போது போலீஸ் காவலில் உள்ள பாலாஜியிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவில் பூசாரி குழந்தைகளின் ஆபாச வீடியோக்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.