திருவண்ணாமலை: நடத்தையில் சந்தேகப்பட்ட கணவனின் கழுத்தை அறுத்த மனைவி..!
திருவண்ணாமலை அருகே நடத்தையில் சந்தேகப்பட்ட கணவனின் கழுத்தை அறுத்த மனைவி மனைவி உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
திருவண்ணாமலை,
தண்டராம்பட்டு அடுத்த தானிப்பாடி அருகிலுள்ள ஆண்டா பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் (40). இவர் கட்டிட மேஸ்திரியாக வேலை செய்து வருகிறார். நேற்று இரவு ராஜேந்திரனின் அலறல் சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தினர் வீட்டுக்கு சென்று பார்த்தபோது ராஜேந்திரன் கழுத்து அறுக்கப்பட்டு உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். அவரை மீட்ட அக்கம்பக்கத்தினர் தானிப்பாடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர் மேல் சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள அவர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் தானிப்பாடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இதுகுறித்து போலிஸ் தரப்பில் கூறப்பட்டது:-
ராஜேந்திரனின் மனைவி ரேவதி (34), இவர்களுக்கு நான்கு மகள் ஒரு மகன் உள்ளனர். கணவர் அடிக்கடி குடித்துவிட்டு மனைவியிடம் தகராறு செய்து வந்துள்ளார். தங்களின் மூத்த மகள் திருமணம் செய்து கொள்ளப் போகும் அவருடைய உறவினர் வல்லரசு (23). இவரிடம் தனது கணவர் ராஜேந்திரன் நடத்தையில் சந்தேகப்பட்டு தினந்தோறும் குடுத்துவிட்டு வந்து துன்புறுத்துவதாக ரேவதி கூறி உள்ளார்.
எனவே இருவரும் சேர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி ராஜேந்திரனை தீர்த்துக் கட்டி விடலாம் என்று முடிவு செய்துள்ளனர். இதனால் நேற்று இரவு இருவரும் சேர்ந்து காய்கறி வெட்டக் கூடிய கத்தியால் ராஜேந்திரனின் கழுத்தை அறுத்து உள்ளனர். ராஜேந்திரன் அலரல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் வந்ததால் இருவரும் வெளியே தப்பி ஓடிவிட்டனர்.
இது தொடர்பாக தகவல் அறிந்ததும் தானிப்பாடி இன்ஸ்பெக்டர் தனலட்சுமி ராஜேந்திரனின் மனைவி ரேவதி மற்றும் உறவினர் இளைஞர் வல்லரசு ஆகிய இருவரையும் கைது செய்து தண்டராம்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.