சசிகலாவுடன் ஓ.பன்னீர் செல்வத்தின் சகோதரர் ஓ.ராஜா சந்திப்பு

தேனி மாவட்ட அதிமுகவினர் சசிகலாவை கட்சியில் சேர்க்கக் கோரி தீர்மானம் நிறைவேற்றிய நிலையில் இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது.

Update: 2022-03-04 13:17 GMT
திருச்செந்தூர், 

முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் 2 நாட்கள் சுற்றுப்பயணம் செய்து பல்வேறு கோவில்களில் சாமி தரிசனம் செய்கிறார். இதற்காக இன்று காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் புறப்பட்டு தூத்துக்குடி வந்தார்.

அதன்பின்னர் சசிகலா அங்கிருந்து புறப்பட்டு நாங்குநேரி, வள்ளியூர், ராதாபுரம் வழியாக விஜயாபதி கிராமம் சென்று அங்குள்ள பழம் பெருமை வாய்ந்த விசுவாமித்திரர் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். பின்னர் அங்கிருந்து கார் மூலம் உவரி வழியாக திருச்செந்தூர் சென்றார். 

இந்த நிலையில், திருச்செந்தூரில் சசிகலாவை அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர் செல்வத்தின் சகோதரர் ஓ.ராஜா சந்தித்துப் பேசியிருக்கிறார். சசிகலாவை அதிமுகவில் இணைக்க வேண்டும் என்ற குரல் மீண்டும் எழுந்துள்ள நிலையில், சசிகலா - ஓ ராஜா இடையேயான இந்த சநதிப்பு அரசியல் வட்டாரத்தில் உன்னிப்பாக கவனிக்கப்படுகிறது. 

மேலும் செய்திகள்