வைக்கோல் ஏற்றி வந்த லாரி தீ பற்றி எரிந்ததால் பரபரப்பு...!
ஆலங்குடி அருகே வைக்கோல் ஏற்றி வந்த லாரி தீ பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஆலங்குடி,
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் பகுதியை சேர்ந்தவர் குமரேசன் (வயது 60). இவருக்கு சொந்தமான சரக்கு லாரியில் ஒக்கூர் சேர்ந்த சேகர் (32) என்பவர் வைக்கோல் ஏற்றி வந்துள்ளார்.
ஆலங்குடி அருகே உள்ள பெரியாளூர் பகுதியில் வந்த லாரி மீது தாழ்வாக சென்ற மின்கம்பிகள் உரசியது. இதில் லாரியில் இருந்த கைக்கோல் தீ பற்றியது. இதனை அறிந்த டிரைவர் லாரியிலிருந்த வைக்கோலை அகற்றுவதற்குள் லாரி முற்றிலும் எரிந்து நாசமானது.
இது குறித்து அறிந்த கீரமங்கலம் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்குவந்து விரைந்து, லாரி மீது எரிந்து கொண்டிருந்த தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த சம்பவம் குறித்து கீரமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.