குடி போதையில் மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தந்தை கைது...!
குடி போதையில் மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து தந்தையை போலீசார் கைது செய்துள்ளனர்.
திருப்பத்தூர்
திருப்பத்தூர் மாவட்டம் புது முத்தப்பர் பகுதியை சேர்ந்தவர் சரவணன் (வயது 42). இவரது மனைவி ஆசிரியர் பணியாற்றி வருகின்றார். இந்த தம்பதிகளுக்க 13 வயதில் ஒரு மகள் உள்னனர். இவர் தற்போது 9-ம் வகுப்பு படித்து வருகின்றார்.
கணவர் சரணவன் தினசரி குடித்துவிட்டு மனைவியிடம் சண்டையிட்டு வந்துள்ளார். இதனால் தம்பதிகள் இருவரும் பிரிந்து வழ்ந்து வந்துள்ளனர்.
கடந்த 6 மாதங்களுக்கு முன்பு உறவினர்கள் இவர்களை சமாதானம் செய்துவைத்ததை தொடர்ந்து இவர்கள் சேர்ந்து வாழ்ந்து வந்தனர்.
இருவரும் சோ்ந்து வாழ்ந்து வந்த நிலையில், சம்பவத்தன்று மது போதையில் வீட்டுக்கு வந்த சரணவன் பெற்ற மகள் என்றும் பாராமல் இரவில் தனியா இருந்த மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து உள்ளார்.
இதனை அறிந்து அதிர்ச்சி அடைந்த தாய் தனது மகளை இந்த அரக்கனிடம் இருந்த பாதுகாப்பதற்காக திருப்பத்தூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
புகாரை தொடர்ந்து வழக்கு பதிவு செய்த போலீசார் சரவணனை கைது செய்து விசாரணை நடத்தி வந்தனர். அப்போது சரணவன் தனது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது உறுதியானதை தொடர்நத அவரை போக்சோவில் கைது செய்து சிறையில் அடைந்தனர்.