காணாமல் போன பா.ம.க. கவுன்சிலரை நேரில் ஆஜர்படுத்த வேண்டும் போலீசுக்கு ஐகோர்ட்டு உத்தரவு
காணாமல் போன பா.ம.க. கவுன்சிலரை வருகிற 7-ந் தேதி நேரில் ஆஜர்படுத்த வேண்டும் என்று போலீசாருக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
சென்னை,
உள்ளாட்சி தேர்தலில் ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி பேரூராட்சியில் மொத்தம் உள்ள 15 வார்டுகளில் 6 வார்டுகளை அ.தி.மு.க.வும், 5 வார்டுகளை தி.மு.க.வும், 3 வார்டுகளை சுயேச்சை உறுப்பினர்களும், ஒரு வார்டில் பா.ம.க.வும் வெற்றி பெற்றுள்ளது.
இந்த நிலையில் பா.ம.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற கவுன்சிலர் சந்திரசேகரை சட்டவிரோதமாக போலீசார் பிடித்து வைத்துள்ளதாக, அவரது மனைவி சென்னை ஐகோர்ட்டில் ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்தார்.
அ.தி.மு.க.வினர் கடத்தல்
இந்த மனு நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், ஏ.ஏ.நக்கீரன் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது போலீஸ் தரப்பில் ஆஜரான குற்றவியல் வக்கீல் முனியப்பராஜ், “கவுன்சிலர் சந்திரசேகரை அ.தி.மு.க.வினர் கடத்தி சென்று விட்டனர் என்று பா.ம.க. ராணிப்பேட்டை கிழக்கு மாவட்ட செயலாளர் சரவணன் நெமிலி போலீசாரிடம் புகார் செய்தார். போலீசார் சந்திரசேகரை கண்டுபிடித்து அவரிடம் விசாரித்தபோது, போரூராட்சி தலைவர் பதவிக்கான தேர்தலில் சுதந்திரமாக ஓட்டு போடப்போவதாக கூறினார். இதையடுத்து அவரை போலீசார் விடுவித்துவிட்டனர். அவர் போலீஸ் கஷ்டடியில் இல்லை” என்று கூறினார்.
ஆஜர்படுத்த வேண்டும்
இதற்கு மனுதாரர் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. அவர் போலீஸ் பிடியில்தான் உள்ளதாக கூறப்பட்டது. இதையடுத்து, காணாமல் போன சந்திரசேகரை வருகிற 7-ந் தேதி நேரில் ஆஜர்படுத்த போலீசாருக்கு உத்தரவிட்ட நீதிபதிகள் விசாரணையை தள்ளிவைத்தனர்.