ஹலோ எப்.எம்.மில் மகாசிவராத்திரி கொண்டாட்ட சிறப்பு நிகழ்ச்சிகள் தொடக்கம்

ஹலோ எப்.எம்.மில் மகாசிவராத்திரி கொண்டாட்ட சிறப்பு நிகழ்ச்சிகள் தொடங்கியுள்ளது.

Update: 2022-03-01 16:52 GMT
சென்னை,

மகாசிவராத்திரியை முன்னிட்டு ஹலோ எப்.எம்.மில் ‘சிவார்ப்பணம்’ என்ற தலைப்பில் மகாசிவராத்திரி கொண்டாட்டம் சிறப்பு தொடர் நிகழ்ச்சி ஒலிபரப்பு தொடங்கியுள்ளது.

இந்த சிறப்பு நிகழ்ச்சி நாளை (புதன்கிழமை) காலை 7 மணி வரை ஒலிபரப்பாகின்றன.

அதன்படி, நான்கு கால பூஜைகள், திருவிளையாடல் ஒலிச்சித்திரம், சொற்பொழிவுகள், சிவாலய குருக்கள் அருள்வார்த்தைகள், கர்நாடக இசைக்கலைஞர்களின் பாடல்கள், தேவாரப்பதிகங்கள் என்று இரவு முழுவதும் இசையோடும் இறைவழிபாட்டோடும் இணைந்த நிகழ்ச்சிகள் தற்போது எப்.எம்.மில் ஒலிபரப்பாகிக்கொண்டிருக்கிறது.

மேலும் செய்திகள்