தமிழக மீனவர்கள் 8 பேர் சிறைபிடிப்பு - இலங்கை கடற்படை அத்துமீறல்
கச்சத்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்த ராமேசுவரத்தை சேர்ந்த 8 மீனவர்களை இலங்கை கடற்படை சிறைபிடித்தது.
ராமேசுவரம்,
ராமேசுவரத்தில் இருந்து நேற்று முன்தினம் 400-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 1500-க்கும் அதிகமான மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். இவர்கள் கச்சத்தீவு அருகே உள்ள நடுக்கடலில் மீன்பிடித்து கொண்டிருந்தனர். இதில் ராமேசுவரத்தில் இருந்து விசைப்படகில் ரமேஷ்(வயது 40), ரோடிக்(19) அஜித் (25), கொலம்பஸ் (52), இமான் (22), லின்சன் (23), பவுத்தி (19), இஸ்ரேல் (20) ஆகிய 8 மீனவர்கள் மீன்பிடித்து கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் இவர்கள் 8 பேரையும் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி கைது செய்தனர். மீன்பிடிப்பதற்கு பயன்படுத்திய படகையும் பறிமுதல் செய்தனர்.
அதிர்ச்சி
பின்னர் கைதான மீனவர்களை, படகுடன் மன்னார் கடற்படை முகாமுக்கு கொண்டு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணைக்கு பின்னர் 8 மீனவர்களும் கிளிநொச்சி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது நீதிபதி, கைதான 8 மீனவர்களையும் வருகிற 11-ந்தேதி வரை சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதை தொடர்ந்து அவர்கள் 8 பேரும் கிளிநொச்சி சிறையில் அடைக்கப்பட்டனர்.
ஏற்கனவே இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு ராமேசுவரம், தொண்டி உள்ளிட்ட ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் மட்டும் 29 பேர் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் தற்போது மேலும் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் ராமேசுவரம் மீனவர்கள் மத்தியில் அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது.