தூக்கில் பிணமாக தொங்கிய புதுமாப்பிள்ளை

சண்முகாபுரத்தில் தூக்குப்போட்டு புதுமாப்பிளை தற்கொலை செய்து கொண்டார். சாவில் சந்தேகம் இருப்பதாக அவரது தங்கை போலீசில் புகார் செய்துள்ளார்.

Update: 2022-02-27 17:32 GMT
சண்முகாபுரத்தில் தூக்குப்போட்டு புதுமாப்பிளை தற்கொலை செய்து கொண்டார். சாவில் சந்தேகம் இருப்பதாக அவரது தங்கை போலீசில் புகார் செய்துள்ளார்.
புதுமாப்பிள்ளை
புதுச்சேரி சண்முகாபுரம் சுப்பிரமணியர் கோவில் தெருவை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 42). பாண்லே ஊழியர். இவரது மனைவி ஜெயா (24). இவர்களுக்கு திருமணமாகி 4 மாதங்களே ஆகிறது. இந்த நிலையில் நேற்று  மாலையில் ராஜேந்திரன் வீட்டு வராண்டாவில் தூக்கில் தொங்கினார்.
இதுகுறித்து ஜெயா தனது கணவரின் தங்கை கலையரசிக்கு தகவல் கொடுத்தார். உடனே அவர் தனது உறவினர்களுடன் அங்கு விரைந்து சென்று தூக்கில் தொங்கிய ராஜேந்திரனை மீட்டு சிகிச்சைக்காக கதிர்காமம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், ராஜேந்திரன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
புகார்
இதுகுறித்து கலையரசி மேட்டுப்பாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதில், எனது அண்ணன் ராஜேந்திரன் சாவில் மர்மம் உள்ளது. அவரது மனைவி ஜெயா எந்தவித பதற்றமும் இல்லாமல் சகஜமாக இருந்தார். ஜெயாவை அவரது வீட்டில் உள்ளவர்கள் அழைத்து சென்று விட்டனர்.
இது தொடர்பாக ஜெயாவிடம் விசாரணை நடத்த வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்