‘இக்கட்டான சூழ்நிலையில் தவிக்கிறோம், காப்பாற்றி அழைத்து செல்லுங்கள்' உக்ரைனில் தவிக்கும் தமிழக மாணவிகள்
உக்ரைனில் உணவு, பாதுகாப்பு இல்லாமல் இக்கட்டான சூழ்நிலையில் தவிக்கிறோம், எங்களை காப்பாற்றி இந்தியா அழைத்து செல்லுங்கள் என்று தமிழகத்தை சேர்ந்த மாணவிகள் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்தனர்.
சென்னை,
உக்ரைன் மீது ரஷியா போர் தாக்குதல்களை தொடங்கியுள்ள நிலையில், அங்கு தவிக்கும் தமிழகத்தை சேர்ந்த மருத்துவ மாணவிகள் தந்தி டி.வி. வழியாக தங்களின் நிலையை பகிர்ந்து கொண்டனர்.
இதுகுறித்து தமிழகத்தை சேர்ந்த மருத்துவ மாணவி மவுனி கூறியதாவது:-
உக்ரைனில் காலையில் இருந்தே பயங்கரமான குண்டு வெடிப்பு சத்தம் நாங்கள் தங்கியிருந்த இடத்தில் கேட்டுக்கொண்டே இருக்கிறது.
குண்டு வெடிப்பதை நேரில் பார்த்தோம், எங்களுக்கு பயமாகவும், பதற்றமாகவும் இருக்கிறது.
ஏ.டி.எம்.மில். பணம் இல்லை
இந்திய தூதரகத்தில் இருந்து எந்தவொரு தகவலும் எங்களுக்கு கொடுக்கவில்லை. விமானமும் இல்லை என்று சொல்லி விட்டார்கள். எப்படி ஊருக்கு வருவோம் என்று தெரியவில்லை. இப்போதைக்கு நாங்கள் தங்கியிருக்கும் அறையை விட்டு வெளியே வரக்கூடாது என்று சொல்லியிருக்கிறார்கள். என்ன செய்வது என்றே தெரியவில்லை. தயவு செய்து இந்திய தூதரகம் ஏதாவது விமானத்தை ஏற்பாடு செய்து பாதுகாப்பாக இந்தியா கூட்டிக்கிட்டு போனால் நல்லாயிருக்கும்.
ஏ.டி.எம்.மில். பணம் இல்லை. எங்களால் முடிந்த அளவுக்கு பொருள் வாங்கியிருக்கிறோம். ஒருவார காலம் எங்களுக்கு உணவு இருக்குமா என்றே தெரியவில்லை. போலந்து எங்களுக்கு பக்கம். அந்த வழியாக எங்களை இந்தியாவுக்கு அழைத்து செல்லலாம். இதுவரைக்கும் எங்களை யாரும் தொடர்பு கொள்ளவில்லை. ஒருவாரமாக கிளம்புவதற்கு முயற்சி செய்தோம், ஆனால் எதுவும் நடக்கவில்லை.
இவ்வளவு சீக்கிரமாக போர் தொடங்கும் என்று நாங்கள் கொஞ்சம் கூட நினைக்கவில்லை. நாங்கள் என்ன செய்யப்போகிறோம் என்றே தெரியவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
திருச்சி மாணவர்
இதேபோல் திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள கீழ முல்லைக்குடியை சேர்ந்த அஜித்(வயது 22) என்பவர் உக்ரைனில் உள்ள பல்கலைக்கழகம் ஒன்றில் மெக்கானிக்கல் என்ஜினீயரிங் படித்து வருகிறார். படிப்பு முடிய இன்னும் 3 மாதங்களே உள்ள நிலையில், அங்கு உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்துள்ளதால் தவிப்புக்குள்ளாகி வருகிறார்.
மத்திய, மாநில அரசுகள் தங்களது மகன் அஜித் மட்டுமல்லாது, அவரை போல தவிக்கும் ஏனைய மாணவர்களையும் பத்திரமாக மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவரது பெற்றோர் கேட்டுக்கொண்டனர்.
தந்தையுடன் பேசும்போது கண்கலங்கிய மாணவி
மாணவி சுகிதாவுடன் தந்தி டி.வி. வழியாக அவரது தந்தை நாகராஜன் உரையாடினார். இந்த உரையாடல் சிறிது நேரம் என்றாலும் உருக்கமாக அமைந்தது. சுகிதாவின் தந்தை தனது மகளிடம் தந்தி டி.வி. வழியாக பேசியதாவது:-
தைரியமா இரும்மா... அமைச்சர் நடவடிக்கை எடுப்பேன் என்று சொல்லியிருக்கிறார். நாளைக்கு முதல்-அமைச்சரை சந்திக்க இருக்கிறேன். போலந்து வழியாக வந்திரலாம் என்று சொல்லியிருக்கிறார்கள். அதுவரை பாதுகாப்பாக இருங்க. எல்லோரும் ஒன்றாக இருங்க.
இவ்வாறு அவர் பேசியதும், அவரது மகள் சுகிதா கண்ணீருடன் சரிப்பா....பார்த்துக்கிறேன் என்று கண் கலங்கினார்.
உக்ரைனில் சிக்கி தவிக்கும் தமிழக மாணவி சுகிதா, தங்களை மீட்க வேண்டும் என்று தந்தி டி.வி. வழியே தி.மு.க. எம்.பி. அப்துல்லாவுக்கு கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்தார்.