உக்ரைனில் தவிக்கும் இந்தியர்களை மீட்க உடனடி நடவடிக்கை மத்திய அரசுக்கு, சீமான் வலியுறுத்தல்
சிறப்பு விமானம் மூலம் உக்ரைனில் தவிக்கும் இந்தியர்களை மீட்க உடனடி நடவடிக்கை மத்திய அரசுக்கு, சீமான் வலியுறுத்தல்.
சென்னை,
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
உக்ரைன் மீது ரஷியா போர் தாக்குதல்களை தொடங்கியுள்ள நிலையில், அங்கு தங்கி படித்து வரும் தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மாணவர்கள் மற்றும் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் அங்கிருந்து வெளியேற முடியாமல் சிக்கித் தவித்து வருவது மிகுந்த வேதனையளிக்கிறது. போர் தொடங்குவதற்கு முன்பே தங்கள் குழந்தைகளை மீட்க வேண்டி பெற்றோர் பலமுறை கோரிக்கை விடுத்தும், அவர்களை பாதுகாப்பாக மீட்டுக்கொண்டுவர மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்காதது வன்மையான கண்டனத்துக்குரியது.
போர் சூழலால் உக்ரைன் நாட்டு அரசு தனது விமான சேவைகளை முடக்கியுள்ளதால், மத்திய அரசால் அனுப்பப்பட்ட விமானம் திருப்பி அனுப்பப்பட்டுள்ளது. இதனால் உக்ரைன் நாட்டிலிருந்து இந்தியாவை சேர்ந்த மாணவர்களும், பொதுமக்களும் வெளியேற முடியாமல் தவித்து வருகின்றனர்.
எனவே நிலைமையின் தீவிரத்தை உணர்ந்து உக்ரைன் நாட்டில் சிக்கியுள்ள மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் வெளியேற ஏதுவாகச் சிறப்பு அனுமதி பெற்று, சிறப்பு விமானம் மூலம் தாயகம் அழைத்துவர மத்திய அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக அரசும் இதற்கான உரிய அழுத்தம் தரவேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.