1½ மாத கர்ப்பிணி மர்மச்சாவு
வில்லியனூரில் 1½ மாத கர்ப்பிணி மர்மமான முறையில் இறந்தார்.
வில்லியனூரில் 1½ மாத கர்ப்பிணி மர்மமான முறையில் இறந்தார்.
கர்ப்பிணி
வில்லியனூர் புதுப்பேட் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் இளமாறன். அரசு பொதுப்பணித்துறை கழிவுநீர் சுத்திகரிப்பு வாகன டிரைவராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி வினோதா (வயது 28). இவர்களுக்கு தீபனா (5) என்ற மகள் உள்ளார். தற்போது வினோதா 1½ மாத கர்ப்பிணியாக இருந்தார்.
இந்தநிலையில் இன்று வினோதா திடீரென வீட்டில் மயங்கி விழுந்ததாக கூறப்படுகிறது. அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக வில்லியனூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், வினோதா ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார்.
மர்மச்சாவு
இதுகுறித்து வில்லியனூர் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சப்-இன்ஸ்பெக்டர் ராஜன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று வினோதாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து வினோதாவின் தாயார் புஷ்பவள்ளி கொடுத்த புகாரின் பேரில் போலீசார் மர்மச்சாவு பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பின்னரே அவர் இறந்ததற்கான காரணம் குறித்து தெரியவரும் என்று போலீசார் தெரிவித்தனர்.