மாநில கல்வி கொள்கையை வகுப்பதில் தாமதம் கூடாது தமிழக அரசுக்கு, டாக்டர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
தேசிய உயர்கல்வி கட்டமைப்பு சமூகநீதிக்கு எதிரானது என்றும், மாநில கல்வி கொள்கையை வகுப்பதில் இனியும் தாமதம் கூடாது என்றும் தமிழக அரசை, டாக்டர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.
சென்னை,
தேசிய உயர்கல்வி தகுதிகள் கட்டமைப்புக்கான வரைவு ஆவணத்தில் இடம் பெற்றுள்ள சமூகநீதிக்கு எதிரான எந்த அம்சத்தையும் ஏற்க இயலாது என்று தமிழ்நாடு அரசு அறிவித்திருக்கிறது. தமிழ்நாடு அரசின் இந்த நிலைப்பாடு மிகவும் சரியானது என்ற போதிலும், மத்திய அரசின் நிலைக்கு மாற்றாக தமிழகத்தில் எத்தகைய கல்விக் கொள்கை செயல்படுத்தப்பட உள்ளது என்பதை அதிகாரப்பூர்வமாக அறிவிப்பதில் செய்யப்படும் காலதாமதம் தேவையற்ற குழப்பங்களையும், சந்தேகங்களையும் ஏற்படுத்தி உள்ளது.
தேசிய உயர்கல்வி தகுதிகள் கட்டமைப்புக்கான வரைவு ஆவணத்தில் இடம் பெற்றுள்ள உயர்கல்வி கற்பதற்காக கட்டுப்பாடுகளை சமூகநீதியில் அக்கறை கொண்ட எவரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். பட்டப்படிப்புக்கு நுழைவுத் தேர்வு, 3 ஆண்டு பட்டப்படிப்பை நான்காண்டுகளாக நீட்டித்தல், பட்டப்படிப்பில் ஒவ்வொரு ஆண்டும் பருவத் தேர்வுகளில் வெற்றி பெறாத மாணவர்களை, பட்டப்படிப்பை தொடர்ந்து படிக்க அனுமதிக்காமல், அவரவர் நிறைவு செய்த ஆண்டுகளின் அடிப்படையில், சான்றிதழ், பட்டயம் கொடுத்து வெளியேற்றுதல் போன்றவை சமூக நீதிக்கு எதிரானவை. ஏழை மற்றும் கிராமப்புற மாணவர்கள் பட்டப்படிப்பைக் கூட படித்துவிடக் கூடாது என்பது தான் தேசிய உயர்கல்வித் தகுதிகள் கட்டமைப்பு உருவாக்கப்படுவதன் நோக்கமாக இருக்கக்கூடும்.
மாநில கல்வி கொள்கை
இதை ஒருபோதும் தமிழ்நாடு அனுமதிக்கக் கூடாது. புதிய கல்விக் கொள்கையை மாநில அரசுகள் பின்பற்ற வேண்டியது எவ்வாறு கட்டாயம் இல்லையோ, அதேபோல் தேசிய உயர்கல்வி தகுதிகள் கட்டமைப்பை கடைப்பிடிக்க வேண்டியதும் கட்டாயம் இல்லை.
அதேநேரத்தில் தமிழக அரசின் இந்த நிலைப்பாட்டை வெளிப்படையாக அறிவித்து, செயல்படுத்துவது தான் மாணவர்கள் மத்தியில் நிலவும் சந்தேகங்களையும், குழப்பங்களையும் போக்கும்.
எனவே தமிழக அரசு ஏற்கனவே அறிவித்த மாநிலக் கல்விக் கொள்கை குறிப்பிட்ட காலவரைக்குள் உருவாக்கப்பட வேண்டும். அதற்கு வசதியாக மாநிலக் கல்விக் கொள்கை வகுக்கும் குழுவை தமிழக அரசு உடனடியாக அறிவிக்க வேண்டும். அதில் சமூகநீதியில் அக்கறை கொண்ட கல்வியாளர்கள் மற்றும் வல்லுனர்களுக்கு இடமளிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.