தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு மறுதேர்தல் நடத்த தேவையில்லை : சென்னை ஐகோர்ட்டு உத்தரவு
தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு மறுதேர்தல் நடத்த தேவையில்லை என சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது
தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு கடந்த 2019 ம் ஆண்டு ஜூன் 23-ந் தேதி தேர்தல் நடந்தது.
இந்த தேர்தல் முறையாக நடைபெறவில்லை என்றும், தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என்றும் சங்கத்தின் உறுப்பினர் ஏழுமலை உள்ளிட்டோர் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, இந்த தேர்தலை ரத்து செய்தார்.
இந்த உத்தரவை ரத்து செய்ய கோரி நடிகர் சங்கம், நடிகர்கள் விஷால், நாசர், கார்த்தி ஆகியோர் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கில் இன்று தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.அதன்படி தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு மறுதேர்தல் நடத்த தேவையில்லை என சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது மேலும் தேர்தலை ரத்து செய்து உத்தரவிட்ட ,தனி நீதிபதியின் தீர்ப்பை ரத்து செய்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது