தேனி: அதிமுக வெற்றி செய்தி கேட்டு மயங்கி விழுந்த திமுக வேட்பாளர்
ஆண்டிபட்டியில் அ.தி.மு.க. வேட்பாளரின் வெற்றி செய்தியை கேட்டு தி.மு.க. வேட்பாளர் மயக்கமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஆண்டிபட்டி,
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி பேரூராட்சிக்கு உள்பட்ட 18 வார்டுகளில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி இன்று நடைபெற்றது.
முதல் சுற்றில் 4 வேட்பாளர்களின் வெற்றி அறிவிக்கப்பட்டது. அதில் 2 இடங்களில் தி.மு.க.வும், 2 இடங்களில் அ.தி.மு.க.வும் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. 3-வது வார்டில் போட்டியிட்ட அ.தி.மு.க. வேட்பாளர் பாலமுருகன் வெற்றி பெற்றதாக தேர்தல் அலுவலர்களால் அறிவிப்பு வெளிவந்தது.
இதைக் கேட்டதும் அவரை எதிர்த்து போட்டியிட்ட தி.மு.க. வேட்பாளர் கார்த்திக் மயக்கமடைந்து கீழே விழுந்தார்.
உடனடியாக அங்கு ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு தேனி அரசு ஆஸ்பத்திரியில் அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதனால் ஆண்டிபட்டி வாக்கு எண்ணிக்கை மையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.