நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முடிவுகள்: 21 மாநாகராட்சியையும் கைப்பற்றுகிறது திமுக...!

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் மாநகராட்சிகள் மட்டுமின்றி பெரும்பாலான நகராட்சி, பேரூராட்சிகளையும் திமுக கூட்டணியே கைப்பற்றும் நிலையில் உள்ளது.

Update: 2022-02-22 07:19 GMT
சென்னை,

தமிழகம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் வெளி வந்து கொண்டிருக்கின்றன. மாநிலம் முழுவதும் இதுவரை வந்துள்ள முடிவுகளின்படி திமுக அணி மிகப்பெரிய அளவில் முன்னிலை வகிக்கின்றன. அதிமுக, பாஜக, பாமக, நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகள் ஆங்காங்கே வெற்றியை பதிவு செய்து வருகின்றன

தமிழக நகர்புற உள்ளாட்சித் தேர்தலில் இதுவரையிலான முடிவுகளின்படி, மொத்தமுள்ள 21 மாநகராட்சிகளில் திமுக 21 இடங்களில் முன்னிலை இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மொத்தமுள்ள 138 நகராட்சிகளில் திமுக 121  இடங்களிலும், அதிமுக 05  இடங்களிலும் உள்ளது. பாமக 2 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.

மொத்தமுள்ள 489 பேரூராட்சிகளில் திமுக 323 இடங்களிலும், அதிமுக 22 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.

மேலும் செய்திகள்