கோவை- சேலம் மாநகராட்சியில் தி.மு.க முன்னிலை- உடனுக்குடன் விவரம்

கோவை மாநகராட்சி 7வது வார்டில் தி.மு.க. வெற்றி அ.தி.மு.க.வின் மேயர் வேட்பாளர் கிருபாலினி கார்த்திகேயன் தோல்வி அடைந்தார்

Update: 2022-02-22 04:49 GMT
சென்னை

* தென்காசி மாவட்டம் புளியங்குடி நகராட்சியில்  1 வது வார்டில் அ.தி.மு.க.வும் 2 வது வார்டில் சுயேட்சை வேட்பாளரும், 3,4 மற்றும் 5 ஆகிய வார்டுகளில் திமுகவும் வெற்றி

* வேலூர் மாநகராட்சி 36வது வார்டில் திமுக வேட்பாளர் யூசுப்கான் வெற்றி

* தூத்துக்குடி மாநகராட்சியில் 3,5,7 மற்றும் 12 ஆகிய வார்டுகளில் திமுக வெற்றி

* சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட ராயபுரம் 59வது வார்டில் தி.மு.க. வேட்பாளர் சரஸ்வதி வெற்றி. அ.தி.மு.க. வேட்பாளர் மகேஸ்வரி டெபாசிட் இழந்தார்

* கோவை மாவட்டம் பேரூர் பேரூராட்சியில் 1,3,4,5 மற்றும் 6,8 ஆகிய வார்டுகளில் திமுகவும், 7 வது வார்டில் அ.தி.மு.க.வும் வெற்றி

* கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை நகராட்சி 1வது வார்டில் வைத்தியநாதன், 2வது வார்டில் குமரவேல் ஆகிய 2 திமுக வேட்பாளர்கள் வெற்றி

* கோவை மாநகராட்சி 7வது வார்டில் தி.மு.க. வெற்றி அ.தி.மு.க.வின் மேயர் வேட்பாளர் கிருபாலினி கார்த்திகேயன் தோல்வி  அடைந்தார்.கோவை மாநகராட்சியில் 100 மொத்த இடங்களில் 16 இடங்களில் தி.மு.க முன்னிலை பெற்று உள்ளது.

அதுபோல் சேலம் மாவட்டத்தில் 10 இடங்களில் வெற்றி பெற்று உள்ளது. அ.தி.மு.க  வெற்றி பெற்று உள்ளது.

* திருப்பூர் மாநகராட்சியில் 8 வார்டுகளில் 6 இடங்களில் திமுக முன்னிலை,  அ.திமுக ஒரு இடத்தில் முன்னிலை, பாஜக ஒரு இடத்தில் முன்னிலை 

* கோவை மாவட்டம் தாளியூர் பேரூராட்சியில் 1,3,4,5 மற்றும் 6 ஆகிய வார்டுகளில் திமுகவும், 2 வது வார்டில் அதிமுகவும் வெற்றி

* கோவை மாவட்டம் வேடபட்டி பேரூராட்சியில் 1,6 ஆகிய வார்டுகளில் அதிமுகவும், 2,3,4 மற்றும் 5 ஆகிய வார்டுகளில் திமுகவும் வெற்றி

* புதுக்கோட்டை நகராட்சி 4-வது வார்டில் விஜய் மக்கள் இயக்க வேட்பாளர் 282 வாக்குகள் பெற்று வெற்றி

* கரூர் மாநகராட்சி 4வது வார்டில் திமுக வேட்பாளர் கவிதா கணேசன் வெற்றி

* கிருஷ்ணகிரி நகராட்சி 6-வது வார்டில் திமுக வேட்பாளர் முஹமத் ஹலி வெற்றி

* விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பம் நகராட்சி 4வது வார்டில் திமுக வேட்பாளர் வீரப்பன் வெற்றி


ராணிப்பேட்டை மாவட்டம் - நகராட்சி வார்டுகள் வெற்றி நிலவரம்




புதுக்கோட்டை மாவட்டம் - பேரூராட்சி வார்டுகள் வெற்றி நிலவரம்




தூத்துக்குடி மாவட்டம் பேரூராட்சி வார்டுகள் வெற்றி நிலவரம்


மேலும் செய்திகள்