அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது

சென்னையில் வாக்குப்பதிவின் போது ஒருவரை தாக்கியதாக ஜெயக்குமார் உட்பட 40 அதிமுகவினர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருந்தது.

Update: 2022-02-21 14:59 GMT

சென்னை,

சென்னையில் வாக்குப்பதிவின் போது ஒருவரை தாக்கிய வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டுள்ளார். 

திமுகவை சேர்ந்த நரேஷ் என்பவர் அளித்த புகாரின் பேரில் சென்னை தண்டையார் பேட்டை போலீசார், ஜெயக்குமார் உள்பட 40 பேர் மீது வழக்குப்பதிவு செய்து இருந்தனர். 

தாக்குதல், கலகம் செய்ய தூண்டுதல், கொலை மிரட்டல், ஆபாசமாக திட்டுதல் உள்ளிட்ட 10 பிரிவுகளின்  வழக்குப்பதிவு செய்யபப்பட்டது.  இந்த நிலையில், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை போலீசார் கைது செய்துள்ளனர். 

மேலும் செய்திகள்