ஒற்றை மொழியின் ஆதிக்கம் இன்றி - அனைத்து மொழிகளும் சமமாக நடத்தப்படும் - மு.க.ஸ்டாலின்

முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் உலக தாய்மொழி தினம் குறித்து டுவிட் ஒன்றை பதிவிட்டுள்ளார்.

Update: 2022-02-21 04:37 GMT
சென்னை,

உலகம் முழுவதும் இன்று (பிப்ரவரி 21) உலக தாய்மொழி தினமாக கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில் தமிழக முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் உலக தாய்மொழி தினம் குறித்து டுவிட் ஒன்றை பதிவிட்டுள்ளார். அந்தப் பதிவில் அவர் கூறியிருப்பதாவது:-

'உலகத் தாய்மொழி நாளில், தங்கள் மொழிகளைப் பாதுகாக்கவும் உரிமைகளை நிலைநாட்டவும் போராடிய தியாகியருக்கு எனது வணக்கத்தைச் செலுத்துகிறேன். அவர்களது தியாகத்தில் இருந்து பெறும் உணர்வெழுச்சி கொண்டு, ஒற்றை மொழியின் ஆதிக்கம் இன்றி - அனைத்து மொழிகளும் சமமாக நடத்தப்படும் அனைவருக்கும் சமமான இந்தியாவைக் காண நாம் அனைவரும் உறுதியேற்போம்' என்று தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்