ஐகோர்ட்டு தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி புதுச்சேரி வந்தார்
சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி இன்று தனது குடும்பத்துடன் புதுச்சேரி வந்தார்
சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி இன்று தனது குடும்பத்துடன் புதுச்சேரி வந்தார். அவர் புதுச்சேரி கடற்கரை சாலை அருகே உள்ள நீதிபதிகள் குடியிருப்பில் தங்கியுள்ளார். இன்று அவர் தனது குடும்பத்துடன் மணக்குள விநாயகர் கோவில், அரவிந்தர் ஆசிரமம், நோணாங்குப்பம் படகு குழாம் உள்ளிட்ட பல்வேறு சுற்றுலா தலங்களுக்கு சென்று பார்வையிட்டார்.
முன்னதாக அவர் புதுச்சேரி-கடலூர் சாலையில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் ஆய்வு செய்தார். அப்போது புதுச்சேரி நீதிபதிகள், அதிகாரிகள் உடன் இருந்தனர்.
பின்னர் அவர் இரவு நேரத்தில் கடற்கரை சாலையில் நடைபயிற்சி மேற்கொண்டார். தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி செல்லும் இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. அவர் நாளை(ஞாயிற்றுக்கிழமை) தங்கியிருந்து பல்வேறு இடங்களை பார்வையிட உள்ளதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.