தர்மபுரியில் 3 வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை...!
தர்மபுரியில் 3 வட்டார வளர்ச்சி அலுவலர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை நடத்தி வருகிறது.
தர்மபுரி,
தர்மபுரி மாவட்டத்தில் ஒரே நேரத்தில் 3 வட்டார வளர்ச்சி அலுவலர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை நடத்தி வருகின்றனர். காலை 8.30 மணியளவில் இருந்து சோதனை நடத்தி வருகின்றனர்.
ஏமக்குட்டியூர் கிராமத்தில் உள்ள மொரப்பூர் பி.டி.ஓ மதலை முத்துவின் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை நடத்தி வருகின்றனர். மேலும் அவருக்கு தொடர்புடைய இடங்களிலும் சோதனை நடந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அரூரில் ஆனந்தன் என்பவரின் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை நடத்தி வருகிறது. மேலும் ஏ.பள்ளிப்பட்டில் ஜெயராமன் என்பவரின் வீட்டிலும் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை நடத்தி வருகிறது.
புகாரின் அடிப்படையில் சோதனை நடைபெற்று வருகிறதா? என்ற முதற்கட்ட தகவல்கள் ஏதும் இல்லாமல் தொடர்ந்து சோதனை நடைபெற்று வருவதால் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.