முன்னாள் அமைச்சர் தலைமையில் அ.தி.மு.க. எம்எல்ஏக்கள் திடீர் தர்ணா போராட்டம்
நியாயமான முறையில் தேர்தல் நடத்தக் கோரி கோவை மாவட்ட கலெக்டரிடம் மனு அளிக்க வந்த அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
கோவை
கோவை மாவட்ட நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் விதிமீறல்கள் நடைபெற்றுள்ளதாக கூறியும், இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க கோரியும் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தலைமையில் அ.தி.மு.க., எம்.எல்.ஏ.க்கள் கோவை கலெக்டர் அலுவலக வளாகத்தில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் இன்று காலை ஈடுபட்டனர்.