உள்ளாட்சி தேர்தல்; 3,621 மது கடைகள் மூடப்பட்டன
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு 3,621 மது கடைகள் மூடப்பட்டு உள்ளன.
சென்னை,
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நாளை நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு, ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்படும் பணம், நகை ஆகியவை பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்படுகிறது.
தமிழக அரசின், டாஸ்மாக் நிறுவனத்திற்கு 5,410 மது கடைகள் உள்ளன. அவற்றில் தினமும் ரூ.100 கோடி மதிப்பிலான பீர் மற்றும் மது வகைகள் விற்பனையாகின்றன. தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு நாளை நடக்கிறது.
இதனால், தேர்தல் நடக்கும் பகுதிகளில் அடையாளம் காணப்பட்ட, 3,621 மது கடைகள் மூடப்பட்டன. நாளை வரை கடைகளை மூட உத்தரவிடப்பட்டு உள்ளது. இதனை தொடர்ந்து, மது பிரியர்கள், மது வகைகளை வாங்கி குவித்தனர். இதனால், அன்றைய தினம் மட்டும், ரூ.250 கோடிக்கும் கூடுதலான மதுபான வகைகள் விற்பனையாகி உள்ளது என கூறப்படுகிறது.