மதுரையில் நாளை கமல்ஹாசன் பிரசாரம்
மதுரையில் நாளை கமல்ஹாசன் பிரசாரம் செய்ய உள்ளார்.
சென்னை,
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி தனித்து போட்டியிடுகிறது. மக்கள் நீதி மய்யம் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் வருகிற 15-ந்தேதி (நாளை), 16-ந்தேதி (நாளை மறுதினம்) ஆகிய 2 நாட்கள் பிரசாரம் செய்ய உள்ளார். மதுரையில் நாளையும், கோவையில் நாளை மறுதினமும் கமல்ஹாசன் வாக்கு சேகரிப்பில் ஈடுபட உள்ளார்.
ஊழலற்ற, வெளிப்படையான, மக்கள் பங்கேற்புடன் கூடிய உள்ளாட்சி நிர்வாகத்தின் மூலம் உலகத்தரம் வாய்ந்த அடிப்படை கட்டமைப்பு வசதிகளை அனைத்து மக்களுக்கும் உறுதிப்படுத்தும் மக்கள் நீதி மய்யத்தின் செயல்திட்டம், வாக்குறுதிகளை விளக்கியும் வேட்பாளர்களை ஆதரித்தும் கோவை, மதுரையில் பல்வேறு நிகழ்வுகளில் கமல்ஹாசன் பங்கேற்கிறார். மக்கள் நீதி மய்யம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.