கள்ளசந்தையில் விற்க இருந்த அரியவகை பறவைகளின் இறைச்சி பறிமுதல்

புதுவையில் அரியவகை பறவைகளை வேட்டையாடி விற்க முயன்றவர்களிடமிருந்து பறவை இறைச்சியை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர்.

Update: 2022-02-13 14:12 GMT
புதுவை,

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் சீசன் காலம் என்பதால்  அரியவகை பறவைகள் பல வருகின்றன. இதனால் ஊசுடு பறவைகள் சரணாலயத்தில் ஆசிய நீர் பறவைகள் கணக்கெடுப்பு பணியின் போது அரியவகை பறவைகளின் இறைச்சி விற்க்க படுவதாக விழுப்புரம் மாவட்ட வன அலுவலகத்துக்கு புகார் வந்தது.

இதை தொடர்ந்து புதுச்சேரி, விழுப்புரம்  வனத்துறையினர் கூட்டாக நடத்திய சோதனையில் 53 இறந்த பறவைகளின் இறைச்சிகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதில் நத்தைகுத்தி நாரை 6, ஆள்காட்டி குருவி 1, சிறிய கொக்கு 2, உன்னி கொக்கு7, குருட்டு கொக்கு 11, வெள்ளை அறிவாள் மூக்கன், 13, ஜொலி ஜொலிக்கும் அரிவாள் மூக்கன் 5, லக்கா 3, ஆகியவை இறைச்சியாக பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் 13 கிளிகள் உயிருடன் பிடிபட்டது. விற்பனை செய்தவர்கள் பறவை இறச்சிகளை அங்கேயே போட்டுவிட்டு தப்பினர்.  இது போன்று அரிய வகை பறவைகள் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை விற்க்கப்படுவதாக கூறப்படுகிறது. 

கொல்லப்பட்ட அரியவகை பறவைகள் வனவிலங்கு பாதுகாப்பு சட்டத்தில்  அட்டவணை செய்யப்பட்டுள்ளன. வனவிலங்கு பாதுகாப்பு சட்டம், 1972ன் கீழ், பறவை இறைச்சியை விற்பதும், வாங்குவதும் தவறு. மேலும் வேட்டையாடி கொன்றோருக்கு மூன்றாண்டு சிறை தண்டனை மற்றும் ரூ.25,000 அபராதம் விதிக்கப்படும் என வனத்துறையினர் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்