மயிலாடுதுறை நகராட்சியில் 19-வது வார்டு தேர்தல் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிப்பு
மயிலாடுதுறை நகராட்சியின் 19-வது வார்டில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மயிலாடுதுறை,
மயிலாடுதுறை நகராட்சியில் மொத்தம் 36 வார்டுகள் உள்ளன. இந்த வார்டுகளில் மொத்தம் 211 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இந்த தொகுதியில் 19-வது வார்டில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் அன்னதாட்சி(வயது 64) தேர்தல் பிரச்சார பணிகளில் ஈடுபட்டு வந்தார்.
இந்நிலையில் நேற்று மாலை கோவில் விழா ஒன்றில் பங்கேற்ற அவர், உடல்நலக்குறைவு ஏற்பட்டு மயங்கி இழுந்தார். இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், நேற்று இரவு அன்னதாட்சி உயிரிழந்தார்.
அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியான அதிமுகவின் வேட்பாளர் அன்னதாட்சி உயிரிழந்ததையடுத்து, அவர் போட்டியிட்ட 19-வது வார்டில் தேர்தல் ஒத்திவைக்கப்படுவதாக நகராட்சி ஆணையரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான பாலு அறிவித்துள்ளார்.